மேஜர் நித்திலா அவர்கள் இராசநாயகபுரம், ஓமந்தை, வவுனியாவைச் சேர்ந்தவர். செல்வநாயகம் துஸ்யந்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஜனவரி 1997 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் - ஆனையிறவு படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.