வீரவேங்கை ரதீபா அவர்கள் கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். செல்வத்துரை யோகம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 ஜனவரி 1996 அன்று அம்பாறை மாவட்டம் 03-ஆம் கட்டை படைமுகாமிலிருந்து சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.