லெப்டினன்ட் துரைக்கண்ணன் (ஆனந்தகுமார்) அவர்கள் கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஞானசுந்தரம் அகிலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 நவம்பர் 1995 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கும்பகர்ணமலைக்கும் டொலர் பாமிற்குமிடையில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.