கப்டன் கோமான் அவர்கள் வாழைச்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். காசுபதி யுகேந்திரராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 நவம்பர் 1995 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கும்பகர்ணமலைக்கும் டொலர் பாமிற்குமிடையில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.