மேஜர் அழகியநம்பி (ஜனகன்) அவர்கள் தலைக் கிராமம், மன்னாரைச் சேர்ந்தவர். இருதயநாதன் கொஸ்தா அன்ரன் ரவீந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 நவம்பர் 1995 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கும்பகர்ணமலைக்கும் டொலர் பாமிற்குமிடையில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.