லெப்டினன்ட் அமுதன் அவர்கள் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஏகாம்பரம் குலசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 அக்டோபர் 1995 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையின் “ரணகஜ” என்ற தரையிறங்கும் கலம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.