2-ஆம் லெப்டினன்ட் இசையழகன் (கிறிஸ்ரி) அவர்கள் கண்ணகிபுரம், வாழைச்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கந்தையா கணேசமுர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 ஜூன் 1995 அன்று யாழ். மாவட்டம் மண்டைதீவு படை முகாம் மீதான தாக்குதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.