லெப்டினன்ட் உதயா அவர்கள் கண்டி, சிறிலங்காவைச் சேர்ந்தவர். கந்தையா சித்திரகுமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 ஜூன் 1995 அன்று யாழ். மாவட்டம் மண்டைதீவு படை முகாம் மீதான தாக்குதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். விடுதலைப் போரில் மடிந்த முதல் பெண் மலையக மாவீரர் இவராவார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.