மேஜர் யாழிசை (மனோ) அவர்கள் காங்கேசன்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். திருலோகசிங்கம் செல்வராணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 செப்டம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் புலோப்பளைப் பகுதியில் யாழ்தேவி படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.