வீரவேங்கை கிட்ணகுமார் அவர்கள் மானாங்கனை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். செல்வராஜா சந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 செப்டம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் புலோப்பளைப் பகுதியில் யாழ்தேவி படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.