மேஜர் மூர்த்தி மாஸ்ரர் அவர்கள் பொலிகண்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சந்திரசேகரம் கிருஸ்ணமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கடற்புலிகளின் பொறியியல் பிரிவுப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். 18 செப்டம்பர் 1993 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் பகுதியில் சிறிலங்கா வான்படை வானூர்திகள் நடத்திய குண்டுவீச்சின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.