கடற்புலி கப்டன் சிவா அவர்கள் குச்சவெளி, திருகோணமலையைச் சேர்ந்தவர். முத்துலிங்கம் கருணாநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஆகஸ்ட் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் கிளாளிக் கடற்பரப்பில் கடற்படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.