கப்டன் வளவர்கோன் (ஜீவகுமார்) அவர்கள் பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இளையதம்பி மோட்சேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 மே 1993 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.