துணைப்படை வீரர் வீரவேங்கை குட்டி அவர்கள் நல்லூர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கணேசலிங்கம் சபேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூலை 1991 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணிப் பகுதியிலிருந்து கட்டைக்காடு நோக்கி முன்நகர முயன்ற சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.