கப்டன் ரசாத் (ரசாக்) அவர்கள் கணேசபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். சிவசுப்பிரமணியம் சுரேஸ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 நவம்பர் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.