மேஜர் கரன் அவர்கள் செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். நல்லதம்பி நடராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 நவம்பர் 1990 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.