2-ஆம் லெப்டினன்ட் ரங்கா அவர்கள் ஊரிக்காடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிங்காரவடிவேல் இராசகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 ஏப்ரல் 1986 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.