கப்டன் அலெக்ஸ் அவர்கள் நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கந்தசாமி நித்தியானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 27 ஏப்ரல் 1986 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.