கப்டன் ஜெயப்பிரகாஸ் (தினேஸ்) அவர்கள் திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். மேகராசா ஜெயந்தராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கஞ்சிக்குடியாறு தங்கவேலாயுதபுரம் பகுதிப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். 25 நவம்பர் 2006 அன்று அம்பாறை மாவட்டம் தங்கவேலாயுதபுரம் நோக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு முயற்சிக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.