கடற்கரும்புலி மேஜர் மதிமுகிலன் அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். பூராசா இன்பராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 டிசம்பர் 2007 அன்று யாழ். மாவட்டம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் பீரங்கிக்கலம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.