2-ஆம் லெப்டினன்ட் செழியன் (சமர்வாணன்) அவர்கள் மாமூலை, முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். தேவதாஸ் தேவஈசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 அக்டோபர் 2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.