2-ஆம் லெப்டினன்ட் சங்கொளியன் அவர்கள் கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கந்தசாமி அருட்செல்வம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஏப்ரல் 2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கதிரவெளிப் பகுதியில் கருணா கும்பலுடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.