மேஜர் பவளரசன் அவர்கள் கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கந்தவனம் சிவனேசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 ஏப்ரல் 2004 அன்று சுகவீனம் காரணமாகச் சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஈடிணையற்ற ஈகங்கள் மூலம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை அளப்பற்றது. எமது மக்கள் இறைமை பெற்று பெருமையுடன் வாழவேண்டும் என்ற இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.