மேஜர் நிலவன் அவர்கள் பொலிகண்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவபாலசிங்கம் வேலவமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 நவம்பர் 2000 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் நடவடிக்கையின்போது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.