லெப்.கேணல் சதீஸ்குமார் அவர்கள் 5-ஆம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலையைச் சேர்ந்தவர். பஞ்சலிங்கம் ஜீவகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 நவம்பர் 2000 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் நடவடிக்கையின்போது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.