கடற்கரும்புலி லெப்.கேணல் கதிர்காமரூபன் (பெத்தா) அவர்கள் புலோலி கிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கனகானந்தம் ஆனந்தகிருஸ்ணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 நவம்பர் 2000 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் நடவடிக்கையின்போது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.