வீரவேங்கை மறைவாணி அவர்கள் திருவையாறு, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். இராமச்சந்திரன் துஸ்யந்தினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 அக்டோபர் 2000 அன்று யாழ். மாவட்டம் எழுதுமட்டுவாள்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 04" நடவடிக்கையின்போது சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.