லெப்டினன்ட் தேவமதி அவர்கள் தாமரைக்குளம், அடம்பன், மன்னாரைச் சேர்ந்தவர். குணம் மதாஜினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 அக்டோபர் 2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 04" நடவடிக்கையின்போது சிறிலங்கா படையினரின் எறிகணைத்தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.