லெப்.கேணல் மாறன் அவர்கள் பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல், மன்னாரைச் சேர்ந்தவர். பழனி வசந்தகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 நவம்பர் 1999 அன்று மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியில் "ஓயாத அலைகள் - 03" நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.