வீரவேங்கை நிரா அவர்கள் கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். விநாயகமூர்த்தி நிராகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 டிசம்பர் 1987 அன்று யாழ். மாவட்டம் உரும்பிராய்ப் பகுதியில் இந்தியப் படையினரின் சுற்றி வளைப்பின்போது இடம்பெற்ற மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.