வீரவேங்கை அருட்செல்வம் அவர்கள் பாலமுனை, மண்டூர், மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சங்கரப்பிள்ளை அருட்செல்வம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 பிப்ரவரி 1986 அன்று மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் பாலமுனையில் சிறிலங்கா அதிரடிப் படையின் சுற்றிவளைப்பில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளரத்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டியிருக்கிறது