வீரவேங்கை நிர்மலா அவர்கள் சுண்டிக்குளி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அன்றூ டொறின் அஜந்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 டிசம்பர் 1987 அன்று யாழ். மாவட்டம் உரும்பிராய்ப் பகுதியில் இந்தியப் படையினரின் சுற்றி வளைப்பின்போது இடம்பெற்ற மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.