வீரவேங்கை சதா அவர்கள் 3-ஆம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சிதம்பரப்பிள்ளை செல்வராணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 டிசம்பர் 1987 அன்று யாழ். மாவட்டம் உரும்பிராய்ப் பகுதியில் இந்தியப் படையினரின் சுற்றி வளைப்பின்போது இடம்பெற்ற மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார். முல்லைத்தீவு மாவட்டத்தின் முதல் பெண் மாவீரர் இவராவார்.
ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே.