மேஜர் முரளி அவர்கள் மேஜர் முரளி வீதி, ஆவரங்கால், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வேலுப்பிள்ளை இரட்ணசிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 டிசம்பர் 1987 அன்று யாழ். மாவட்டம் உரும்பிராய்ப் பகுதியில் இந்தியப் படையினரின் சுற்றி வளைப்பின்போது இடம்பெற்ற மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச் சிற்பிகள், எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.