கடற்புலி 2-ஆம் லெப்டினன்ட் அருள்மதி அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். வெற்றிவேலாயுதம் விஜந்திரராணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூலை 1995 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவி கடற்படையின் எடித்தாரா கட்டளைக்கப்பல் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப் போரில் எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம் மாவீரரின் இலட்சியக்கனவு அவர்களது ஆன்மீக தாகம் என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.