கடற்புலி கப்டன் தாயகி அவர்கள் பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மகாலிங்கம் ரஞ்சினிதேவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூலை 1995 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவி கடற்படையின் எடித்தாரா கட்டளைக்கப்பல் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.