கடற்புலி கப்டன் கமலம் அவர்கள் பயிரிக்கடல், காரைநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். குழந்தைவேல் சிறிரஞ்சினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூலை 1995 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவி கடற்படையின் எடித்தாரா கட்டளைக்கப்பல் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.