கடற்புலி லெப்.கேணல் சந்திரன் (நரேஸ்) அவர்கள் சாரதா வீதி, திருகோணமலையைச் சேர்ந்தவர். சிவராஜசிங்கம் நவராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கடற்புலிகளின் தாக்குதல் தளபதியாகக் கடமையாற்றினார். 16 ஜூலை 1995 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவி கடற்படையின் எடித்தாரா கட்டளைக்கப்பல் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.