கடற்புலி 2-ஆம் லெப்டினன்ட் நித்தியா அவர்கள் மாங்குளம், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். மாரிமுத்து மஞ்சுளா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூலை 1995 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவி கடற்படையின் எடித்தாரா கட்டளைக்கப்பல் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.