கடற்கரும்புலி கப்டன் தமிழினி அவர்கள் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவப்பிரகாசம் கனிமொழி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 ஜூலை 1995 அன்று யாழ். மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவி சிறிலங்கா கடற்படையின் எடித்தாரா கட்டளைக்கப்பலை மூழ்கடித்து வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.