வீரவேங்கை இன்பன் அவர்கள் உச்சியோடை வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தம்பிராசா மங்களேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 11 நவம்பர் 1993 அன்று கிளிநொச்சி மாவட்டம் பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.