வீரவேங்கை தவம் அவர்கள் அச்சுவேலி தெற்கு, ஆவரங்கால், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நடேசு தவராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஜனவரி 1985 அன்று யாழ். மாவட்டம் ஆவரங்கால்ப் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
அந்நிய ஆதிக்க விலங்குளால் கட்டுண்டு கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற சுதந்திர தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.