லெப்டினன்ட் சோழன் அவர்கள் குருநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். செலஸ்ரின் விஜயராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20.06.1992 அன்று கட்டுவன் காவலரணில் ஏற்பட்ட வெடி விபத்தில் விழுப்புண்ணடைந்து யாழ். மருத்துவமனையில் பண்டுவம் பெறும்போது 21 ஜூன் 1992 அன்று வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்; நெருப்பு நதிகளை நீந்திக் கடக்கும் நீண்ட பயணம்; தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம். இந்த விடுதலை வேள்விக்கு தமது உயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள்.