வீரவேங்கை நேரு அவர்கள் கச்சேரி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். செல்லையா தில்லைச்சந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஜனவரி 1985 அன்று யாழ். மாவட்டம் ஆவரங்கால்ப் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீதான சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளரத்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டியிருக்கிறது