வீரவேங்கை வேதா (சந்துரு) அவர்கள் இளமருதங்குளம், சேமமடு, ஓமந்தை, வவுனியாவைச் சேர்ந்தவர். யோசப் பொன்னுத்துரை டொண்பொஸ்கோ என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 டிசம்பர் 1984 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு ஒதியமலைப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளரத்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டியிருக்கிறது