வீரவேங்கை இடிஅமீன் அவர்கள் நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்தவர். கணபதிப்பிள்ளை சிவலோகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 24 டிசம்பர் 1984 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு ஒதியமலைப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயங்கிளிலிருந்தே வரலாறு படைக்கும் சக்திபெற்ற அபூர்வ மனிதர்கள் பிறக்கிறார்கள். எமது சமூகத்திற் பிறந்த அந்த அந்த அபூர்வ மனிதர்கள்தான் எமது மாவீரர்கள்.