வீரவேங்கை ஸ்ரிபன் அவர்கள் 5-ஆம் குறுக்குத்தெரு, குருநகர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அல்வீனப்பா தர்மன்ஸ்ரிபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஏப்ரல் 1991 அன்று யாழ். மாவட்டம் நீராவியடிப் பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.