வீரவேங்கை சிறீக்காந் அவர்கள் கொக்குவில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிவப்பிரகாசம் சிறீக்காந் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 ஏப்ரல் 1991 அன்று யாழ். மாவட்டம் நீராவியடிப் பகுதியில் இடம்பெற்ற வெடி விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.