மாவீரர் கவியரசி (அமலா) அவர்கள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர். கனகரத்தினம் பாமினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கணினி வன்தொழில் நுட்பப்பிரிவு ஆளுகைப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். 17 மே 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.