கேணல் கோபித் அவர்கள் மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். வைத்தியலிங்கம் சந்திரபாலன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 30 மார்ச் 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் இரட்டைவாய்க்கால்ப் பகுதியில் சிறிலங்கா படையினரின் பாரிய முற்றுகைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.